ADDED : ஜூன் 08, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே பூச்சி கொல்லி மருந்து குடித்து கட்டட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
குள்ளஞ்சாவடி அடுத்த கோரணப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை, 34; கட்டட தொழிலாளி. இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் தனது முந்திரி தோப்பில் இருந்த களைக்கொல்லி மருந்தை ராஜதுரை குடித்தார். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ராஜதுரை கடலுார் அரசு மருத்துவமனையிலும், அதனை தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ராஜதுரை இறந்தார். புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
