/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் அதிகாரிகள் 'ஆப்சென்ட்'
/
நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் அதிகாரிகள் 'ஆப்சென்ட்'
நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் அதிகாரிகள் 'ஆப்சென்ட்'
நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் அதிகாரிகள் 'ஆப்சென்ட்'
ADDED : ஆக 20, 2024 12:11 AM
நெல்லிக்குப்பம: நெல்லிக்குப்பத்தில் நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் அறிவிக்கப்பட்டு கமிஷனர் உட்பட அதிகாரிகள் பங்கேற்காததால் கூட்டம் நடைபெறவில்லை.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஒவ்வொரு காலாண்டுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நகாட்சி கமிஷனர் தலைமையில் நடக்கும்.
நேற்று நடப்பு காலாண்டுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கூட்டத்திற்கு, நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் மெய்யழகன் தலைமையில் நுகர்வோர்கள் பங்கேற்றனர்.
ஆனால் கூட்டத்தை நடத்த வேண்டிய நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை.
அதிகாரிகள் யாரும் வராததை கண்டித்து மெய்யழகன் தலைமையில் அனைவரும் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.
3 நாட்களுக்குள் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்கும் கூட்டத்தை நடத்தா விட்டால் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.