தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தொடரும் சாரல் மழை

தொடரும் சாரல் மழை

தொடரும் சாரல் மழை


ADDED : மே 23, 2024 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2024 05:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மேகம் சூழ்ந்து, சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் கோடை காலத்தின் உச்ச கட்டமான கத்தரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. உச்ச கட்ட வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இலங்கை அருகே ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலுார் மாவட்டத்தில் ஓரிரு நாள் மழை பெய்தது. தொடர்ந்து மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.

அதன் விளைவாக கடலுார் மாவட்டத்தில் வெயில் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us