என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம் முன் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம் முன் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
UPDATED : செப் 19, 2026 11:21 PM
ADDED : செப் 19, 2026 08:31 PM
மந்தாரக்குப்பம்:பண நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலை கேட்டு என்.எல்.சி., இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் முன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
என்.எல்.சி.,யில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த 300 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி நேற்று காலை 11:40 மணிக்கு 85 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் என்.எல்.சி., அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் சேர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இது குறித்து உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து தீர்வு காணப்படும் என்றனர்.
அதனையேற்று மாலை 3:30 மணிக்கு தர்ணாவை கைவிட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
