ADDED : ஜூன் 29, 2024 05:56 AM

புதுச்சத்திரம் : சேந்திரக்கிள்ளையில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அமைக்க வேண்டுமென பா.ஜ., பிரமுகர் சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்த அவர் கூறியதாவது:
புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளையில் 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி கிராமம் சார்ந்த பகுதி என்பதால், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
இப்பகுதி விவசாயிகள் பயிர் கடன் பெறுவது, பயிர் காப்பீடு செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு, கீழமணக்குடியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில், உறுப்பினராக சேர்ந்து, கடன் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
கீழமணக்குடி பகுதிக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் விவசாயிகள், முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு சென்று வர சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு சேந்திரக் கிள்ளை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை இணைத்து சேந்திரக்கிள்ளையில் புதிதாக தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சுரேஷ் கூறினார்.