/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டுறவு வங்கி தலைமை அலுவலக குழு கூட்டம்
/
கூட்டுறவு வங்கி தலைமை அலுவலக குழு கூட்டம்
ADDED : ஆக 08, 2024 11:44 PM

கடலுார்: சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில், பொதுப்பணி நிலைத்திறன் குறித்த குழுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, குழு தலைவரான கூடுதல் பதிவாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். இதில், தொழிற்சங்கம் சார்பில் 31 வகையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு, குழு தலைவர் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டார். விரைவில் குழுவின் அறிக்கை பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்படுவதாகதெரிவித்துள்ளார்.
மேலும், நகைக்கடன் ஏல இழப்பீட்டு தொகையினை நஷ்ட கணக்கில் கொண்டு செல்லும் பொருட்டு சில சங்கங்களின் முன் மொழிவுகள் பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் பதிவாளரிடம் (நிதி மற்றும் வங்கியியல்) வழங்கப்பட்டது.
அப்போது, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாநில தலைவர் மணிவண்ணன், மாநில இணைச்செயலாளர் சேகர், செங்கல்பட்டு மாவட்ட துணைத் தலைவர் நந்தகோபால் மற்றும் கோயம்புத்துார் முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் ரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.