தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கூட்டுறவு பட்டய மேலாண்மை பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு 

கூட்டுறவு பட்டய மேலாண்மை பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு 

கூட்டுறவு பட்டய மேலாண்மை பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு 


ADDED : ஜூலை 04, 2026 08:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 08:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் இளஞ்செல்வி செய்திக்குறிப்பு: 

கடலுார் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2026–2027ம் ஆண்டிற்கான முழு நேர கூட்டுறவு லேமாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்க்கை நடக்கிறது. பயிற்சி காலம் ஓராண்டாகும். இப்பயிற்சி இரண்டு பருவ முறைகள் கொண்டது.

வரும், 20ம் தேதி 6 மாலை 5:00 மணி வரை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின்  www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பயிற்சி தமிழில் அளிக்கப்படும். பயிற்சிக்கான தேர்வை தமிழில் எழுத வேண்டும். விண்ணப்ப கட்டணம் 100 ரூபாயை இணையவழியில் மட்டுமே செலுத்த வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்–3, பீச்ரோடு, சரவணபவ கூட்டுறவு பண்டகசாலை, கடலுார் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04142–222619 என்ற தொலைபேசி  எண்ணிலும், icmcuddrmgr@gamil.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us