ADDED : ஜூலை 03, 2026 08:20 PM
அ நிறம் | அளவு
கடலுார்: விருத்தாசலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்டுறவு வார விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விருத்தாசலத்தில் உள்ள கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்டரங்கில் கூட்டுறவு வார விழா நடந்து வருகிறது.
3ம் நாள் விழாவில் விருத்தாசலம் சரக துணைப் பதிவாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி பேசினார்.
விழாவில், ஏ.ஐ., மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம், டிஜிட்டல் வங்கி சேவைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில், கூட்டுறவு சார் பதிவாளர்கள், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.
