ADDED : மே 16, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
நெய்வேலி: டிரான்ஸ்பார்மரில் காப்பர் ஒயரை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெய்வேலி அடுத்த வடக்குத்து கிராம நெல் வயலில் மின் மோட்டார் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மரில் நேற்று பெட்டியை மர்ம நபர்கள் உடைத்து காப்பர் ஒயரை திருடிச் சென்றனர். திருடப்பட்ட காப்பர் ஒயர் மதிப்பு ரூ. 1,30,000 ஆகும்.
இதுகுறித்து வடக்குத்து மின்வாரிய உதவி மின் பொறியாளர் தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின் பேரில், நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
