ADDED : செப் 04, 2024 06:59 AM
கடலுார் மக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, பாதாள சாக்கடை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் நிலுவையில் உள்ளது.
வரி வசூலிப்பதில், ஒரு சில பில் கலெக்டர்களின் செயல்பாடுகள் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.
வீட்டின் உரிமையாளர்களிடம் மிரட்டும் தொனியில் பேசுவது, வீட்டு வரியை கடை வரியாக போடுவது, இல்லாத வீட்டிற்கு பாதாள சாக்கடை தொகையை சேர்ப்பது, வீட்டை உடனடியாக அளந்து பார்க்க வேண்டும் என மரிட்டுவது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் மாஜி., கவுன்சிலர் ஒருவர் வீட்டிற்கு சென்ற பில் கலெக்டர் ஒருவர், 'வீட்டை அளந்து பார்க்க வேண்டும்' என்ற கூறியுள்ளார். ஆத்திரமைடந்த அவர், புகார் விண்ணப்பத்தோடு கமிஷனரிடம் முறையிட வந்துள்ளார். அவரை நகராட்சி ஊழியர்கள் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். வரிவசூலில், மாநராட்சி ஊழியர்கள் சிலரது நடவடிக்கை மாநகராட்சிக்கும், ஆளும் தி.மு.க., அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே, புதியதாக பொறுப்பேற்றுள்ள கமிஷனர், மாநகராட்சி ஊழியர்கள் செயல்பாடுகளை, குறைத்துக்கொள்ளவும், பொதுமக்களிடம் வரி வசூல் செய்யும்போது கண்ணியத்துடன் நடந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும் என, மாநகர மக்கள் விரும்புகின்றனர்.