தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பருத்தி சாகுபடி ஆலோசனை 

பருத்தி சாகுபடி ஆலோசனை 

பருத்தி சாகுபடி ஆலோசனை 


ADDED : ஜூன் 16, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 09:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: குமராட்சி அடுத்த மாதர்சூடாமணி கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் பண்ணைப் பள்ளி மூலம் விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடி குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.  

வேளாண்மை உதவி இயக்குநர் தமிழ்வேல் தலைமை தாங்கி பண்ணைப் பள்ளியின் முக்கியத்துவம் மற்றும் பருத்தி சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விளக்கினார். 

விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி சிவசங்கர் பருத்தி சாகுபடியில் உரமிடல், களை மேலாண்மை, அதிக மகசூல் எடுக்கும் உத்திகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்து, இருவரும் விவசாயிகளுடன் இணைந்து பருத்தி சாகுபடியில் எதிர்கொள்ளும்  சாறு உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன், பச்சைத்தத்து பூச்சி, அசுவணி, செஞ்சிலந்தி, மாவுப்பூச்சி மற்றும் வாடல் நோய் குறித்து கலந்துரையாடல் மூலம் தீர்வு ஏற்படுத்தினர். 

வேளாண்மை அலுவலர் நடராஜன் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து பேசினார். ஏற்பாடுகளை வட்டார தொழில் நுட்ப மேலாளர் கல்பனா, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் எட்வின், பிரகாஷ் செய்திருந்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us