ADDED : மார் 06, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆலோசனை முகாம் புவனகிரியில் நடந்தது.
புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முகாமில் வட்டார கல்வி அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் துரைமணிாஜன் வரவேற்றார். கருத்தாளர்கள் எழிலரசி, சடகோபன் முன்னிலை வகித்தனர். வடலூர் ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் பழனி, பேராசிரியர் நல்லமுத்து ஆகியோர், ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.
விருத்தாசலம் சட்ட ஆலோசகர் வசந்திநடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சட்ட ஆலோசனைகள் வழங்கினார். முகாமில் மேல்புவனகிரி ஒன்றியத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஆசிரியர் பயிற்றுனர் கீதா நன்றி கூறினார்.