ADDED : ஆக 25, 2024 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: பைக்குகள் மோதி கொண்ட விபத்தில் தம்பதி படுகாயமடைந்தனர்
குள்ளஞ்சாவடி அடுத்த மதனகோபாலபுரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர், கோதண்டபாணி மகன், நாராயணசாமி, 64. இவர் நேற்று முன்தினம், மனைவி சாந்தி, 59, உடன் பைக்கில் சென்றார். அப்போது எதிர் திசையில் வேகமாக வந்த மற்றொரு பைக் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் படுகாயமடைந்த தம்பதியர் கடலூர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.