/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூச்சி மருந்து குடித்த தம்பதி மனைவி பலி; : கணவருக்கு சிகிச்சை பண்ருட்டி அருகே சோகம்

ADDED : மார் 03, 2025 06:24 AM
பண்ருட்டி : பண்ருட்டி அருகே குழந்தை இல்லை என பக்கத்து வீட்டுக்காரர் திட்டியதால், வேதனையில் பூச்சி மருந்து குடித்த மனைவி உயிரிழந்தார். கணவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுப்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபால், 32. இவரது மனைவி ஜெயக்கொடி, 25. இவர்களுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் சாரங்கபாணிக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.
நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில், உங்களுககு குழந்தை இல்லை என, சாரங்கபாணி திட்டியதாக தெரிகிறது.
இதில், மனமுடைந்த ஜெயபால், அவரது மனைவி ஜெயக்கொடி, இருவரும் முந்திரிக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து மயங்கினர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஜெயக்கொடி சிகிச்சை பலனின்றி இறந்தார். ஜெயபால் மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.