/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தாலுகா அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்; விருத்தாசலத்தில் பரபரப்பு

ADDED : செப் 05, 2024 04:21 AM

விருத்தாசலம் : விருதாசலம் தாலுகா அலுவலகத்தில்உள்ள தளவாட பொருட்களை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த பரவலுார் கிராமத்தில் உள்ள மணிமுத்தாற்றில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்த கோரி, பரவளூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் விருத்தாசலம் முதன்மை நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மணிமுத்தாற்றில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க கோரி, வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, தீர்ப்பு வழங்கினர்.
ஆனால்,நீதிமன்றம் வழங்கிய உத்தரவை, மீறி, வருவாய் துறை அதிகாரிகள், அனுமதியுடன் கடந்த 2014ம் ஆண்டு மணிமுத்தாற்றில் மணல் அள்ளியதால், கடந்த 2015ம் ஆண்டு பரவளூர் கிராமத்தைச் சேர்ந்த தனிநபர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
கடந்தாண்டுஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட விருத்தாசலம் தாலுகா அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில்உள்ள இரும்பு பீரோக்கள்,டேபிள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட தளவாட பொருட்களை ஜப்தி செய்யஉத்தரவிட்டனர்.
இதன்காரணமாக, விருத்தாசலம் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், ஜப்தி செய்வதற்காக, விருத்தாசலம் தாலுகா அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.
அதைத்தொடர்ந்து, தாசில்தார் உதயகுமார் கால அவகாசம் கேட்டதால், வரும் 9ம் தேதி வரை அவகாசம் அளித்து நீதிமன்ற ஊழியர்கள் அங்கிருந்து சென்றனர்.
இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.