/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வருக்கு நன்றி கடன் அமைச்சர் கணேசன் பேட்டி
/
முதல்வருக்கு நன்றி கடன் அமைச்சர் கணேசன் பேட்டி
ADDED : ஜூன் 04, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தேர்தலில் வெற்றியை அளித்து, முதல்வருக்கு தமிழக மக்கள் நன்றிக்கடன் செலுத்தி உள்ளனர் என, அமைச்சர் கணேசன் கூறினார்.
கடலுார் லோக்சபா தொகுதி காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்ற சான்றிதழ் வாங்கும்போது, உடனிருந்த அமைச்சர் கணேசன் கூறுகையில், தி.மு.க.,கூட்டணி தமிழகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ளது. தமிழக முதல்வர் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் நடத்திய நல்லாட்சிக்கு கிடைத்துள்ள பரிசாகும். தமிழக அரசின் திட்டங்களுக்கு, மக்கள் நன்றிக்கடன் செலுத்தும் வகையில் தேர்தல் வெற்றியை தந்துள்ளனர் என்றார்.