/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பத்தில் கிரிக்கெட் போட்டி
/
நெல்லிக்குப்பத்தில் கிரிக்கெட் போட்டி
ADDED : ஆக 10, 2024 05:57 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் தி.மு.க.,விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கிரிக்கெட் போட்டியை சேர்மன் ஜெயந்தி துவக்கி வைத்தார்.
நெல்லிக்குப்பத்தில் கடலுார் மேற்கு மாவட்ட தி.மு.க.,விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி துவக்க விழா நடந்தது.நகர செயலாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார்.தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.ஒருங்கிணைப்பாளர் பிரபு வரவேற்றார்.
போட்டிகளை சேர்மன் ஜெயந்தி துவக்கி வைத்தார்.விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் சபா,முத்துசாமி,தி.மு.க.,நகர அவைத்தலைவர் முசாதிக்அலி,துணை செயலாளர் பார்த்தசாரதி,மாவட்ட பிரதிநிதிகள் வீரமணி,வேலு,கதிரேசன்,இளைஞரணி சாமிநாதன்,ராஜா,கவுன்சிலர்கள் முத்தமிழன்,ஸ்ரீதர்,பூபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.போட்டிகளில் 25 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.