/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டு தோட்டத்தில் முதலை சிதம்பரம் அருகே பரபரப்பு
/
வீட்டு தோட்டத்தில் முதலை சிதம்பரம் அருகே பரபரப்பு
ADDED : மார் 02, 2025 04:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அருகே வீட்டு தோட்டத்தில் புகுந்த முதலையை பொதுமக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
சிதம்பரம் அடுத்துள்ள குமராட்சி ரெட்டித் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது வீட்டின் பின்புற தோட்டத்தில் நேற்று காலை முதலை ஒன்று புகுந்தது. 6 நீளம், 30 கிலோ எடையுள்ள முதலையை, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து, குமராட்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சிதம்பரம் வனச்சரக அலுவலர் வசந்த் பாஸ்கர் தலைமையிலான குழுவினர் முதலையை மீட்டு சிதம்பரம் வக்காரமாரி குளத்தில் விட்டனர்.