/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கால்நடை பராமரிப்பு நிதி வழங்கியதில் பல கோடி முறைகேடு... குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
/
கால்நடை பராமரிப்பு நிதி வழங்கியதில் பல கோடி முறைகேடு... குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
கால்நடை பராமரிப்பு நிதி வழங்கியதில் பல கோடி முறைகேடு... குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
கால்நடை பராமரிப்பு நிதி வழங்கியதில் பல கோடி முறைகேடு... குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
ADDED : ஆக 31, 2024 02:50 AM

கடலூர்: காவிரி பாசன நீரை சிக்கனமாக விநியோகம் செய்ய, ஒருங்கிணைந்த நீர் விநியோக கண்காணிப்பு அமைப்பு உருவாக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ராஜசேகரன் முன்னிலை வகித்தார். தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) அருண் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது;
ரவிந்திரன்: பயிர் காப்பிட்டு திட்டத்தில் இழப்பீட்டு தொகை வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வட்டார அளவில் சிறப்பு முகாம் நடத்தி நிலுவையில் உள்ள இழப்பிட்டுத் தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செவ்வழுகல் நோய் தாகுதல் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். காவிரி பாசன நீரை சிக்கனமாக விநியோகம் செய்ய அனைத்து, காவிரி பாசன மாவட்டங்களில் ஒருங்கிணைந்த நீர் விநியோக கண்காணிப்பு அமைப்பு உருவாக்கி கண்காணிக்க வேண்டும்.
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு பராமரிப்பு நிதி வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க, பொருளாதார குற்றப்பிரிவிற்கு உத்தரவிட வேண்டும்.
மாதவன்: கடந்த 2023 டிச., மாதம் பெய்த மழை மற்றும் வறட்சியால் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
ஜன., மாதம் கிள்ளை, பிச்சாவரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மணிலா பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சக்கரை ஆலையில் கழிவு என்ற பெயரால் ஐந்து முதல் 15 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கு பிடித்தம் செய்த கழிவுத்தொகை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அம்பிகா ஆலையில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை எப்.ஆர்.பி.,யை வட்டியுடன் வழங்க வேண்டும்.
வங்கிகளில் ஆலை நிர்வாகம் வாங்கி உள்ள கடன்களை பைசல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு என்.ஓ.சி., சான்றிதழ் வழங்க வேண்டும். என்.எல்.சி., நிலம் கொடுத்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பாக முத்தரப்பு கூட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட முந்திரி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கீழப்பாளையம் ஒன்றியத்தில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.
முருகானந்தன்: பயன்படுத்தாத இலவச விவசாய மின் இணைப்பு கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இந்த இலவச மின்சார இணைப்பை ரத்து செய்யக்கூடாது. வீரமுடையநத்தம், பெரியநெற்குணம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்வதை விட வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலைக்காக எடுக்கப்பட்ட நிலத்தினை தவிர மீதமுள்ள நிலங்களுக்கு தடையில்லா சான்று வழங்க வேண்டும்.
மணிவண்ணன்: சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் அங்கிருந்த பாசன வாய்க்கால் மூடப்பட்டுள்ளது. அதை சீரமைத்து வாய்க்கால் அமைத்து கொடுக்க வேண்டும்.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார்: விவசாயிகளின் கோரிக்கை மற்றும் மனுக்களை விசாரணை நடத்தி அதிகாரிகள் உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.