/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலி புத்தக கண்காட்சியில் குவிந்த பார்வையாளர்கள்
/
நெய்வேலி புத்தக கண்காட்சியில் குவிந்த பார்வையாளர்கள்
நெய்வேலி புத்தக கண்காட்சியில் குவிந்த பார்வையாளர்கள்
நெய்வேலி புத்தக கண்காட்சியில் குவிந்த பார்வையாளர்கள்
ADDED : ஜூலை 09, 2024 05:51 AM

நெய்வேலி : நெய்வேலி புத்தக கண்காட்சியை, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவ மாணவியர் 4 நாட்களில் பார்வையிட்டுள்ளனர்.
நெய்வேலியில் கடந்த 5ம் தேதி, புத்தக கண்காட்சி துவங்கியது. என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி முன்னிலையில் கலெக்டர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நுால்கள் வெளியிடப்பட்டு ஒரு எழுத்தாளர் மற்றும் ஒரு பதிப்பகத்தார் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் நேற்று என்.எல்.சி., மின்துறை இயக்குநர் வெங்கடாசலம் தலைமையில் நடந்த நுால் வெளியீட்டு விழாவில், என்.எல்.சி.,யில் சிறந்த எழுத்தாளர் விருது பெற்ற எழுத்தாளர் ராஜகுமாரன் எழுதிய புன்னகை பூக்கள் நுால் வெளியிடப்பட்டது. ஜெகநாதன் சிறந்த எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றார், புத்தகக் கண்காட்சியில் நடந்த ஆன்-தி-ஸ்பாட் போட்டி, தி ட்ரெஷர் ஹன்ட், புத்தக கண்காட்சி அரங்கில் உற்சாகமான வரவேற்பை பெற்றது. கடந்த நான்கு நாட்களில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மாணவ மாணவியர்கள் பார்வையிட்டதாக, ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.