ADDED : மார் 02, 2025 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் கிளை சிறைச் சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
கடலுார் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் கடந்த 1983ம் ஆண்டு முதல் கிளை சிறைச்சாலை உள்ளது. 143 பேர் தங்கும் அளவிற்கு கட்டப்பட்ட சிறைச்சாலை இட நெருக்கடி காரணமாக 75 பேர் மட்டுமே தங்க அனுமதிக்கப்பட்டனர். இங்கு, காவலர்கள், ஊழியர்கள் உட்பட 18 பேர் பணிபுரிந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் நடந்த சிறைத்துறை அதிகாரிகள் மாதாந்திர கூட்டத்தில், கைதிகள் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடலுார் கிளை சிறைச் சாலையை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நேற்று முதல் கிளை சிறைச்சாலை தற்காலிமாக மூடப்பட்டது. இதனால், அங்கு அடைக்கப்பட்டிருந்த 15 விசாரணை கைதிகள் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.