/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மத்திய சிறையில் கைதிகள் திடீர் போராட்டம்
/
கடலுார் மத்திய சிறையில் கைதிகள் திடீர் போராட்டம்
ADDED : செப் 05, 2024 05:10 AM
கடலுார்: கடலுார் மத்திய சிறையில், கைதிகள் மூவர் கட்டத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார், கேப்பர் மாலையில் உள்ள மத்திய சிறையில், தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தண்டனை கைதிகளான கள்ளக்குறிச்சி ராக்கெட்ராஜா (எ) ராஜா,27; திருநாவலுார் மாரிமுத்து, 31; என்பவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.
இவர்களில், ராஜா அவ்வப்போது ஜாமினில் பரோலில் சென்று வந்தபோது, மாரிமுத்து குடும்பத்தாரிடம், அவரை ஜாமினில் எடுத்து வருவதாக கூறி பணம் வாங்கியுள்ளார். இதனை அறிந்த மாரிமுத்து, சிறைக்கு திரும்பிய ராஜாவிடம் கேட்கவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அதில் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதனை அறிந்த சிறை அதிகாரிகள், இருவரையும் நேற்று காலை விசாரணைக்கு அழைத்தனர். உடன் மாரிமுத்து மற்றும் அவரது நண்பர்கள் இருவரும், சிறை வளாக கட்டத்தின் உச்சியில் ஏறி அமர்ந்து கொண்டு, விசாரணைக்கு வர மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, சிறை அதிகாரிகள் சமாதானம் செய்ததை ஏற்று, 20 நிமிடம் கழித்து மூவரும் கீழே இறங்கினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.