ADDED : மே 28, 2026 06:04 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் தொகுதியில் எம்.எல்.ஏ., அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
கடலுார் தொகுதி எம்.எல்.ஏ., வாக த.வெ.க.,வை சேர்ந்த ராஜ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், வீட்டு வசதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து, நேற்று எம்.எல்.ஏ., அலுவலகத்தை திறந்து வைத்தார். கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில், மாவட்ட நிர்வாகிகள் அன்பு சத்தியராஜ், ஒன்றிய செயலாளர் சுபாஷ், பகுதி செயலாளர் சாரதி, இணை செயலாளர் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
