/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ளத்தில் சேதமான கஸ்டம்ஸ் சாலை; நிரந்தரமாக சீரமைக்க கோரிக்கை
/
வெள்ளத்தில் சேதமான கஸ்டம்ஸ் சாலை; நிரந்தரமாக சீரமைக்க கோரிக்கை
வெள்ளத்தில் சேதமான கஸ்டம்ஸ் சாலை; நிரந்தரமாக சீரமைக்க கோரிக்கை
வெள்ளத்தில் சேதமான கஸ்டம்ஸ் சாலை; நிரந்தரமாக சீரமைக்க கோரிக்கை
ADDED : பிப் 22, 2025 07:30 AM

நெல்லிக்குப்பம்; வெள்ளத்தால் சேதமான கஸ்டம்ஸ் சாலையை நிரந்தரமாக சரி செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரியுள்ளனர்.
கடலூரில் இருந்து மேல்பட்டாம்பாக்கம் வரை பெண்ணையாற்றின் கரையோரம் கஸ்டம்ஸ் சாலை போடப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலை கண்டரக்கோட்டையில் உள்ள விக்கிரவாண்டி-தஞ்சாவூர் சாலையை இணைக்கும் வகையில் பணிகள் துவங்கினர்.
ஆனால் அரசியல்வாதிகளின் குறுக்கீட்டால் கடலூரில் துவங்கி மேல்பட்டாம்பாக்கம் வரை மட்டுமே பணி முடிந்தது.
இந்த சாலை முழுவதுமாக முடிந்திருந்தால் கடலுார் வழியாக சென்னை வரை செல்லும் வாகனங்கள் போக்குவரத்து இடையூறு இல்லாமல் செல்ல முடியும்.கடந்த நவம்பர் மாதம் ஆற்றில் வெள்ளம் வந்தபோது இந்த சாலையின் பல இடங்களில் கரைகள் உடைந்தது.
இதனால் மேல்பட்டாம்பாக்கம் அருகே கஸ்டம்ஸ் சாலையில் பாதியளவு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதை மணல் மூட்டைகள் அடுக்கி தற்காலிகமாக சரி செய்தனர்.
அதேபோல் விஸ்வநாதபுரம்,வெள்ளப்பாக்கம் உட்பட பல இடங்களில் கரை உடைந்தது.
எனவே கடலூர் மாவட்டத்துக்கு வந்துள்ள முதல்வர் ஸ்டாலின் கஸ்டம்ஸ் சாலை ஓரங்களில் பெண்ணையாற்றின் கரையை கான்கிரீட் சுவர் அமைத்து வெள்ளம் வரும் போது பாதிப்பு ஏற்படாமல் தடுக்க கரையை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரியுள்ளனர்.

