/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனி நபர் எதிர்ப்பால் கால்வாய் பணி பாதிப்பு
/
தனி நபர் எதிர்ப்பால் கால்வாய் பணி பாதிப்பு
ADDED : ஜூலை 16, 2024 11:45 PM

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பத்தில் தனி நபர் எதிர்ப்பால், பாரதியார் தெருவில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம் நகராட்சி, பாரதியார் தெருவில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு, கடந்த 15 நாட்களுக்கு முன்பு, ஒப்பந்ததாரர் பணியை துவக்கினார்.
அதற்காக, அந்த தெருவில் சாலையோரம் வீடுகளையொட்டி, 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டும் பணி நடந்தது. 70 மீட்டர் நீளத்திற்கு பள்ளம் தோண்டிய நிலையில், தனி நபர் ஒருவர், தனது வீட்டின் படிகட்டை இடித்து அகற்ற எதிர்ப்பு தெரிவித்தார்.
அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் உதவியை அவர் நாடியதால், பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால், 20 க்கும் மேற்பட்ட வீடுகளின் முன்பு பள்ளம் தோண்டப்பட்டதால், வீடுகளில் வசிப்பவர்கள் வெளியே வர முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
தனி நபருக்காக அதிகாரிகள், கிடப்பில் போடப்பட்ட பணியை துவங்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்கள், தனியார் நபர் ஆக்கிரமிப்பை அகற்றி பணியை துவங்க வலியுறுத்தியும், நகராட்சியை கண்டித்தும் போராட தயாராகி வருகின்றனர்.