/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடிகால் வாய்க்கால் கல்வெர்ட் சேதம் பின்னலுாரில் விபத்து ஏற்படும் அபாயம்

ADDED : ஜூலை 29, 2024 05:10 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுாரில் வடிகால் வாய்க்கால் கல்வெர்ட் தடுப்பு கட்டை சேதமடைந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னை-கும்பகோணம் சாலை அம்பாள்புரம் பிரிந்து செல்லும் சாலையில் வடிகால் வாய்க்கால் பாலம் தடுப்பு கட்டை சேதமடைந்துள்ளது. சாலை மட்டத்தில் இருந்து ் வடிகால் வாய்க்கால் 3 அடி வரை தாழ்வாக உள்ளதால் வாகனங்கள் வாய்க்காலில் விழும் அபாயம் உள்ளது.
இரவு நேரங்களில் அம்பாள்புரம் செல்ல திரும்பும் இருசக்கர வாகனங்கள் வாய்க்காலில் விழுந்து விபத்திற்குள்ளாகின்றன.தடுப்பு கட்டை சேதமடைந்து பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில் கட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த சாலையில் சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ஜெயங்கொண்டம், சிதம்பரம், கடலுார் உள்ளிட்ட பஸ்கள் அதிகளவில் சென்று வருகின்றனர்.
தடுப்பு கட்டை இல்லாததால் பஸ்கள் எதிர் வரும் கனரக வாகனங்களை கடக்கும்போது வாய்க்காலில் இறங்கும் அபாயம் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலில் தடுப்பு கட்டை கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.