/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் பயணிகள் நிழற்குடை சேதம்
/
கடலுாரில் பயணிகள் நிழற்குடை சேதம்
ADDED : ஆக 04, 2024 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மகளிர் கல்லுாரி முன் பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளதால், மாணவியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடலுார்-நெல்லிக்குப்பம் சாலையில் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரி உள்ளது. இந்தகல்லுாரி முன், சாலையோரத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இங்கு கல்லுாரி மாணவியர் காத்திருந்து, தங்கள் பகுதிகளுக்கு பஸ்களில் பயணித்துவருகின்றனர். இந்நிலையில், இந்த நிழற்குடை மேற்கூரை தற்போது சேதமடைந்துவிழும் நிலையில் உள்ளது. இதனால், இங்கு காத்திருக்கும் மாணவியர்களுக்கு
ஆபத்து ஏற்படக்கூடும் என அச்சமடைந்துள்ளனர்.எனவே, மாணவியருக்கு பாதிப்பு ஏற்படும் முன்நிழற்குடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.