/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் பிரதான சாலையில் மெகா பள்ளத்தால் அபாயம்
/
கடலுார் பிரதான சாலையில் மெகா பள்ளத்தால் அபாயம்
ADDED : ஜூன் 20, 2024 08:44 PM

கடலுார் : கடலுாரில் பிரதான சாலையோரம் ஏற்பட்டுள்ள மெகா சைஸ் பள்ளத்தால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.
கடலுார் ஜவான்பவனில் இருந்து கம்மியம்பேட்டை வழியாக செம்மண்டலம் செல்லும் வகையில், கெடிலம் ஆற்றின் கரையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை வழியாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மார்க்கத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சிதம்பரம் மார்க்கத்திற்கும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், கெடிலம் ஆற்றில் உள்ள அம்மன் கோவில் அருகில் இச்சாலையோரத்தில் மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளம், சாலையின் உள் பகுதி வரை இருப்பதால் வாகனங்கள் எப்போது வேண்டுமானாலும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, சாலையோரத்தில் ஏற்பட்டுள்ள மெகா சைஸ் பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.