/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தாய்மொழிக்கு ஆபத்து: ஸ்டாலின் வேதனை
/
தாய்மொழிக்கு ஆபத்து: ஸ்டாலின் வேதனை
ADDED : பிப் 22, 2025 07:27 AM

நெய்வேலி; நெய்வேலியில், மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 5,774 பேர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வினர் இணைந்தனர்.
நிகழ்ச்சிக்கு அமைச்சர் கணேசன் வரவேற்றார். அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம், பொன்முடி, சிவசங்கரன் முன்னிலை வகித்தனர். தி.மு.க.,வில் இணைந்தவர்களை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இணைப்பு விழாவை மாநாடு போல சிறப்பாக நடத்திய எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரனையும், உறுதுணையாக இருந்த அமைச்சர் கணேசனையும் பாராட்டுகிறேன். தமிழகத்தில் தாய் மொழிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கும் சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது.
மத்திய அரசு, மும்மொழிக் கொள்கையை வைத்து அரசியல் செய்கிறது. இந்த சூழ்நிலையில், நம் இயக்கத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 5,774 பேர் நம்முடன் சேர்ந்துள்ளனர். அவர்களை இதயப்பூர்வமாக வரவேற்கிறேன் என்றார்.
சபாராஜேந்திரன் எம்.எல்.ஏ., நன்றி கூறினார். விழாவில், ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, என்.எல்.சி.. தொ.மு.ச., தலைவர் திருமாவளவன், பொது செயலாளர் பாரி, பொருளாளர் அய்யப்பன், அலுவலக செயலாளர் ஜெரால்டு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

