/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நாய்க்கு தர்ப்பணம் கடலுாரில் நெகிழ்ச்சி
/
நாய்க்கு தர்ப்பணம் கடலுாரில் நெகிழ்ச்சி
ADDED : ஆக 04, 2024 09:22 PM

கடலுார்:கடலுார், கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் சரவணன், 44; பழைய கலெக்டர் அலுவலக சாலையில் பெட்டிக் கடை வைத்துள்ளார். இவர், கடந்த 5 ஆண்டுகளாக 'லேப்ரடார்' என்ற வகை நாயை வளர்த்து வந்தார். கடந்த 26ம் தேதி நாய் உடல் நிலை பாதித்து இறந்தது. நேற்று, ஆடி அமாவாசை என்பதால் கடலுார், தேவனாம்பட்டிணம் கடற்கரையில் நாயின் புகைப்படத்தை வைத்து தர்ப்பணம் கொடுத்தார். இச்சம்பவம் கடற்கரையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, காரைக்காட்டில் நாய் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அதற்கு பிடித்த உணவை வைத்து படையலிட்டார்.
இதுகுறித்து சரவணன் கூறுகையில், 'குடும்பத்தில் ஒருவராக நாயை வளர்த்து வந்தேன். நாய் இறந்ததால் ஆடி அமாவாசை தினமான நேற்று தர்ப்பணம் கொடுத்தேன். நாயை அடக்கம் செய்த இடத்தில் அதன் நினைவாக கோவில் கட்டவும் முடிவு செய்துள்ளேன்' என்றார்.