ADDED : செப் 03, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : திட்டக்குடி அருகே மகளை காணவில்லை என, போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.
திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் சாவித்திரி, 19; பிளஸ்2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 29ம் தேதி, அவரது தாய் பழனியம்மாள், அவரது கணவர் சண்முகம் ஆகியோர் வயல் வேலைக்கு சென்றுவிட்டனர். வேலை முடிந்து வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்து மகளை காணவில்லை.
இதுகுறித்து தாய் பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.