ADDED : பிப் 23, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அருகே மகளை காணவில்லை என, தாய் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த கீழக் கொல்லையை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் நிஷாந்தி, 24; ஐ.டி.ஐ., முடித்துவிட்டு சென்னையில் உள்ள சகோதரியுடன், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஒரு வாரம் முன் வீட்டிற்கு வந்திருந்தவர் கடந்த 20 ம்தேதி அதிகாலை, வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் சென்னைக்கு செல்லவில்லை.
இதுகுறித்து நிஷாந்தியின் தாய் சாந்தி,45; கொடுத்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

