/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொலை மிரட்டல்: நால்வர் மீது வழக்கு
/
கொலை மிரட்டல்: நால்வர் மீது வழக்கு
ADDED : ஜூன் 26, 2024 11:23 PM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நிலத்தகராறு தொடர்பாக வாலிபரை தாக்கி மிரட்டல் விடுத்த நால்வர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
விருத்தாசலம் வயலுாரை சேர்ந்தவர் பரமசிவம் மகன் சுப்ரமணி, 35; இவரது தாத்தா பெயரில் உள்ள 27 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் உள்ளிட்ட சிலர் போலியாக ஆவணம் தயாரித்து விருத்தாசலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், நேற்று முன்தினம் மாலை நேரில் சென்று தட்டிக்கேட்டுள்ளார்.
அதில் ஆத்திரமடைந்த சின்னேட்டு மகன்கள் அய்யப்பன், அன்பழகன், மதியழகன், அன்பழகன் மகன் கவியரசன் ஆகியோர் சுப்ரமணியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சுப்ரமணி புகாரின் பேரில், அய்யப்பன் உள்ளிட்ட நால்வர் மீது விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஐயனார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.