ADDED : பிப் 22, 2025 09:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : மயிலாடுதுறை அடுத்த குத்தாலத்தை சேர்ந்த ராஜசேகர் மகன் பவித்ரன்,30. நெல்லிக்குப்பம் திடீர்குப்பத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, வட்டிக்கும் பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். கடன் வாங்கியவர்கள் பலர் முறையாக பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என, தெரிகிறது. இதனால், பெரிய அளவில் கடன் பிரச்னையில் சிக்கியுள்ளார். மனவருத்தத்தில் இருந்த பவித்ரன் நேற்று காலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

