/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லித்தோப்பு உயர்மட்ட பாலம் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
/
நெல்லித்தோப்பு உயர்மட்ட பாலம் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
நெல்லித்தோப்பு உயர்மட்ட பாலம் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
நெல்லித்தோப்பு உயர்மட்ட பாலம் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : மே 04, 2024 06:54 AM

நடுவீரப்பட்டு : சாத்திப்பட்டு- சி.என்.பாளையம் இடையில் கட்டப்படும் புதிய உயர்மட்ட பாலம் கட்டுமான பணியினை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டிலிருந்து சி.என்.பாளையம் செல்லும் சாலையில் நெல்லித்தோப்பு சங்கிலியான் ஓடையில் இருந்த சிறிய பாலம் பழுதடைந்தது.
இதனால் புதிய பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நபார்டு திட்டத்தின் கீழ் 8 கோடியே 43 லட்சம் மதிப்பில் கடந்த 2022ம் ஆண்டு புதிய பாலம் கட்டுமான பணிகள் துவங்கியது.
இதனால் சி.என்.பாளையத்திலிருந்து பண்ருட்டி செல்பவர்கள் கீழ்மாம்பட்டு வழியாக சுற்றிக்கொண்டு செல்கின்றனர்.இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பாலம் கட்டுமான பணிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக போக்குவரத்து தடைப்பட்டது. தற்போது இந்த சங்கிலியான் ஓடை பாலம் கட்டுமான பணிக்காக தற்போது இரண்டு ஆண்டுகளாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதனால் இந்த வழியாக கடந்த 4 ஆண்டுகளாக பஸ் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
தற்போது பாலம் கட்டுமான பணி முடிந்து சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
ஆகையால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த உயர்மட்ட பாலம் கட்டுமான பணியினை விரைந்து முடித்து,பஸ் போக்குவரத்திற்கு வழி செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.