நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, பெண்ணாடத்தில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பழைய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர செயலாளர் அரவிந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட குழு ராஜேந்திரன், வட்ட செயலர் அன்பழகன், நகர கிளை கணேஷ்குமார் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் மகாலிங்கம், வட்டக்குழு நிர்வாகிகள் மாணிக்கவேல், வரதன், மாயவேல் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், அம்பிகா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர். நகர கிளை பரமசிவம் நன்றி கூறினார்.