ADDED : ஆக 26, 2026 07:03 PM
விருத்தாசலம்: மேகமலையில் கிராம மக்களை வெளியேற்றுவதை கண்டித்து விருத்தாசலத்தில் த.வா.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம், மேகமலையில் 98 கிராமங்களை சேர்ந்த 6 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றனர். மலைப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறிய சுப்ரீம் கோர்ட் அதனை அகற்றக் கோரி உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஒரு மாதமாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதால், பாலக்கரையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் இளையராஜா தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் முருகன், கவுன்சிலர் சேகர், யாகூப், ஜெகன், ஜமால், கார்த்திகேயன் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில், மேகமலையில் கிராம மக்களை வெளியேற்றுவதை நிறுத்தக் கோரியும், தமிழக முதல்வரை கண்டித்தும் கோஷமிடப்பட்டது.
