ADDED : மே 12, 2026 03:32 PM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்புக்காக புகை மருந்து அடிக்கும் பணி நடக்கிறது. நெல்லிக்குப்பம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நகராட்சி பணியாளர்கள் தினமும் வீடுவீடாக சென்று டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான சுத்தமான நீர் தேங்கியுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர். சேர்மன் ஜெயந்தி,கமிஷனர், கிருஷ்ணராஜன் உத்தரவின்பேரில் துப்புரவு ஆய்வாளர் கேசவன் முன்னிலையில் டெங்கு கொசு பரவும் மாலை நேரத்தில் அதை ஒழிப்பதற்கான புகை மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த மருந்து அடிக்கும் போது தெருக்கள் மட்டுமல்லாது வீடுகளிலும் புகை வருவதால் கொசு உற்பத்தியை தடுக்க வாய்ப்புள்ளதாக நகராட்சி அதிகாரிகள் கூறினர்.
