/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணாமலை பல்கலையில் வேதிபொறியியல் துறை மாநாடு
/
அண்ணாமலை பல்கலையில் வேதிபொறியியல் துறை மாநாடு
ADDED : ஆக 13, 2024 05:52 AM

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதிப்பொறியியல் துறையின் 75 ம் ஆண்டுவிழாவையொட்டி முன்னாள் மாணவர்கள் மாநாடு நடந்தது.
மாநாட்டில் துறைத் தலைவர் சரவணன் வரவேற்றார். பொறியியல் துறை புலமுதல்வர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். துணைவேந்தர் கதிரேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுமாநாட்டை துவக்கி வைத்து, விழா மலரை வெளியிட்டார்.
பேராசிரியர் யாதவ், 'வேதிப்பொறியியலில் பல்துறை' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முன்னாள் ஆசிரியர் பைரவன், முன்னாள் மாணவர்கள் நரசிம்மன், அருள்தாஸ் கந்தையா, பத்மா வாழ்த்துரைவழங்கினர். 1990 ம் ஆண்டு பேட்ச் கெமிக்கல் இன்ஜினியரிங் துறை முன்னாள் மாணவர்கள் சார்பில், ஆய்வகங்க உபகரணங்களுக்காகரூ. 1.14 லட்சம் வழங்கப்பட்டது.
'உலகம் வாசிப்போம்' என்ற தலைப்பில் சாகித்ய அகாடமி விருது பெற்ற ராமகிருஷ்ணன் பேசினார்.

