/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உணவு பாதுகாப்பு துறை உழவர் சந்தையில் ஆய்வு
/
உணவு பாதுகாப்பு துறை உழவர் சந்தையில் ஆய்வு
ADDED : ஜூன் 29, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் உழவர் சந்தையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கடலுார் உழவர் சந்தையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கைலாஷ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரசேகர், சுப்ரமணியன், உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் மகாதேவன் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது, உணவு பாதுகாப்பு பற்றியும், பழங்கள் பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் ரசாயன திரவம், கார்பைடு கல் போன்றவற்றை தவிர்த்தல் குறித்தும் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
உதவி வேளாண்மை அலுவலர்கள் சீனுவாசபாரதி, மணியரசி மற்றும் சுந்தரமூர்த்தி உடனிருந்தனர்.