/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கல்லுாரியில் மாணவர் சேர்க்கையை உயர்த்த துணை மேயர் மனு
/
கல்லுாரியில் மாணவர் சேர்க்கையை உயர்த்த துணை மேயர் மனு
கல்லுாரியில் மாணவர் சேர்க்கையை உயர்த்த துணை மேயர் மனு
கல்லுாரியில் மாணவர் சேர்க்கையை உயர்த்த துணை மேயர் மனு
ADDED : ஜூலை 06, 2024 05:05 AM

கடலுார்: கடலுார் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டுமென வி.சி., கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கலெக்டர் அருண் தம்புராஜியிடம் வி.சி., சார்பில் மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன் அளித்த மனு:
கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ள சூழலில் கடலுார் அரசு பெரியார் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை 50 சதவீதம் அதிகப்படுத்த வேண்டும்.
கல்லுாரியில் இடம் கிடைக்காமல் ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, கடலுார் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.