/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கரும்பூரில் பேரிடர் மீட்பு செயல் விளக்கம்
/
கரும்பூரில் பேரிடர் மீட்பு செயல் விளக்கம்
ADDED : ஜூன் 05, 2024 12:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: கரும்பூர் கிராமத்தில் தீயணைப்பு துறை சார்பில் நீர்நிலைகளில் விபத்து தடுப்பு குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
பண்ருட்டி தீயணைப்பு துறை சார்பில் கரும்பூர் கிராமத்தில் உள்ள குளத்தில் பள்ளி மாணவர்கள், கல்லுாரி மாணவர்களுக்கு நீர் நிலைகளில் விபத்து குறைப்பது குறித்து செயல்முறை விளக்கம் நடந்தது.
பண்ருட்டி தீயணைப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நீர்நிலைகளில் விபத்து தவிர்ப்பது, இயற்கை பேரிடர் காலங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.