/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி.,யின் வளர்ச்சி திட்டங்கள்: சேர்மன் பிரசன்னகுமார் பெருமிதம்
/
என்.எல்.சி.,யின் வளர்ச்சி திட்டங்கள்: சேர்மன் பிரசன்னகுமார் பெருமிதம்
என்.எல்.சி.,யின் வளர்ச்சி திட்டங்கள்: சேர்மன் பிரசன்னகுமார் பெருமிதம்
என்.எல்.சி.,யின் வளர்ச்சி திட்டங்கள்: சேர்மன் பிரசன்னகுமார் பெருமிதம்
ADDED : மே 22, 2024 11:13 PM

நெய்வேலி : என்.எல்.சி., மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி முன்னேற்றம் அடைந்து வருவதாக அந்நிறுவன சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி கூறினார்.
நெய்வேலியில், என்.எல்.சி., யின் 68 வது உதய தின விழா கொண்டாடப்பட்டது. சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தலைமை தாங்கினார். இயக்குனர்கள் மோகன் ரெட்டி, சுரேஷ் சந்திர சுமன், வெங்கடாசலம் , பிரசன்னகுமார் ஆச்சார்யா முன்னிலை வகித்தனர். மனிதவளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப் வரவேற்றார். என்.எல்.சி., கொடியை ஏற்றி வைத்து சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசியதாவது:
என்.எல்.சி., நிறுவனம் விரைவான வளர்ச்சியை நோக்கி முன்னேற்றமடைந்து வருகிறது, என்.எல்.சி.,யின் எதிர்காலம் அனைத்து வணிகத் துறைகளிலும் மிகப்பெரிய பலத்தை பெறும். இந்நிறுவனத்தை, ஒருங்கிணைந்த எரிசக்தி நிறுவனமாக நிலை நிறுத்துவதற்கு, வலுவான உக்திகளுடன் கூடிய நவீன திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.
சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரம் போன்ற கூடுதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களாக விரிவுபடுத்துதல், பசுமை ஹைட்ரஜனில் உள்ள வாய்ப்புகளை ஆராயும் எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை செயல்படுத்துதல், நீரேற்றம் செய்யப்பட்ட சேமிப்பு நீர்மின் திட்டங்கள், பழுப்பு நிலக்கரியில் இருந்து மெத்தனால் எடுத்தல், சுரங்கத்திலிருந்து நீக்கப்படும் மேல் மண்ணிலிருந்து எம்-சாண்ட் என்ற மணல் தயாரிப்பதற்கான முன்முயற்சிகள், முக்கியமான கனிம ஆய்வு மற்றும் பிற நிலைத்தன்மையை மையமாக கொண்ட முயற்சிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பணி ஓய்வு பெற்ற மூத்த பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

