ADDED : ஜூலை 31, 2026 04:41 PM
கடலுார்: ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலுார், முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் பிரமோற்சவம் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நேற்று செடல் உற்சவம் நடந்தது. மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று இரவு 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலா நடக்கிறது. நாளை காலை 7:00 மணிக்கு திருத்தேர் உற்சவம், இரவு 7:00 மணிக்கு தெப்பல் உற்சவம் நடக்கிறது. வரும், 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம், 4ம் தேதி இரவு 7:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.
இதே போன்று, கடலுார் புதுப்பாளையம் கழுத்து மாரியம்மன், வண்ணாரப்பாளையம் முத்துமாரியம்மன், வில்வ நகர் பகவதி மாரியம்மன் ஆகிய கோவில்களிலும் செடல் உற்சவம் நடந்தது.
