ADDED : ஜூலை 02, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்டத்தில், வயிற்று போக்கால் குழந்தைகள் உயிரிழப்பு இல்லை என்ற நிலை ஏற்படுத்த சிறப்பு முகாம் நடத்தி, மருந்துகள் வழங்கப்படுகிறது.
முகாமில் 5 வயதிற்குட்பட்ட 2 லட்சத்து 8 ஆயிரத்து 903 குழந்தைகளுக்கு மருந்து வழங்கப்பட உள்ளது.குழந்தைகள் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும் ஓ.ஆர்.எஸ்., கரைசல், சிங் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீடுகளுக்கு நேரடியாக சென்று, ஓ.ஆர்.எஸ் கரைசல் எப்படி தயாரிப்பது. சிங் மாத்திரைகள் எப்போது சாப்பிட வேண்டும் போன்றவை குறித்து விளக்கி கூறுகின்றனர்.