/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சின்னவடவாடி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
/
சின்னவடவாடி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
சின்னவடவாடி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
சின்னவடவாடி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED : மே 05, 2024 04:20 AM

விருத்தாசலம் : சின்னவடவாடி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 16ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
தொடர்ந்து தினமும் காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு அபி ேஷக, ஆராதனையும் இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடந்தது.
நேற்று 3ம் தேதி தீமிதி திருவிழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு கழு மரம் ஏறுதல், 9:00 மணிக்கு அரவான் களபலி நடந்தது.
மாலை 5:00 மணியளவில் நடந்த தீமிதி திருவிழாவில் ஏராளமானோர் தீ மிதித்தனர். தீ மிதித்த பக்தர்கள் கோவில் முன்பு வந்து மண்டியிட்டு, அடிவாங்கி தங்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் வினோத நிகழ்ச்சியும் நடந்தது.
நேற்று 4ம் தேதி பட்டாபிேஷகம், இன்று காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், மாலை 6:00 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.