/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா
/
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா
ADDED : ஜூன் 02, 2024 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: இறையூர் திரவுபதி அம்மன் கோவில், தீமிதி உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
பெண்ணாடம் அடுத்த இறையூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி உற்சவ விழா, கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு அபிஷேகம், மகா தீபாராதனை மற்றும் திருக்கல்யாண உற்சவம், அரவாண் களபலி நடந்தது.
முக்கிய நிகழ்வான நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் நடந்த தீமிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.