ADDED : மே 12, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த அரியராவி முத்துமாரியம்மன் கோவில் தீமீதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தீமிதி விழா, கடந்த 3ம்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி காலை அம்மனுக்கு அபிேஷகம், இரவு அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. பால்குடம் ஊர்வலம், ஊரணி பொங்கல், கன்னிமார்கள் தவம் அழித்தல் நிகழ்ச்சி, கழுகு மரம் ஏறுதல் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் தீமிதி விழா நடந்தது.