ADDED : மே 26, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
விழா, கடந்த 14ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.அதையொட்டி அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலை தீமிதி திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.