/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எழுமேடு கோவிலில் 19ல் தீமிதி விழா
/
எழுமேடு கோவிலில் 19ல் தீமிதி விழா
ADDED : ஜூலை 17, 2024 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : பண்ருட்டி அடுத்த எழுமேடு மன்னார்சுவாமி, பச்சைவாழியம்மன் கோவிலில் வரும் 19ம் தேதி தீமிதி விழா நடக்கிறது.
கோவிலில், 25ம் ஆண்டு தீமிதி விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மதியம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, விநாயகர், வள்ளி தேவசேனா சுப்பரமணியர், பச்சைவாழியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. 19ம் தேதி காலை 9:00 மணிக்கு சுப்ரமணியருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
தொடர்ந்து, வள்ளி தேவசேனா சுப்ரமணியர் வீதியுலாவும், மாலை 5:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது. 6;30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.